Friday, September 16, 2011

தெய்வத் திருமந்திரம்

           
                    வித்யா நிகேதன் பள்ளியில்  பாட்டு  போட்டிநடக்கப்போகிறது  . நான் அதற்கு தயார் நிலையில் இல்லவே இல்லை . வீட்டில் நான் முதற் பரிசு பெறுவேன் என்று ஆவலுடன் அனுப்பி வைத்தார்கள் . பெயர் வந்தவுடன் எழுந்துரிக்க வேண்டுமே என்று உடம்பு நடுங்க உட்கார்ந்து கொண்டிருந்தேன் . சுமார் பத்து பேர் பாடி முடிததுக்கு அப்புறமும் என் பெயர் வரவில்லையே என்று என்று ஏக்கத்துடன் எழுந்து போர்டில் சென்று பார்த்தேன் . ஒன்று , இரண்டு ... இருபது , ஆ !!!! இதோ வந்துவிட்டது .
அமுதன் ... இன்னும் ஆறு பேர் போக வேண்டுமா !!!!! முனங்கிக்கொண்டே வந்து  உட்கார்ந்து பார்த்தேன் . இருபது நிமிடங்களுக்கு பிறகு என் பெயர் வந்தது . உடனே எழுந்து அந்த முருகனை வேண்டி கொண்டே மேடை ஏறி சென்றேன் .
பின்பு ஒரும் முறை அனைவரையும் பார்த்த பிறகு முருகா என்று மைக்கில் கூறிவிட்டு "முத்தை தரு பத்தித் திருநகை ....... பெருமாளே"!!!!! என்று முடித்தேன் . எப்படி பாடினேன் என்று எனக்கு தெரியும் . நாடாவில் அபஸ்வரம் வந்து வார்த்தைகளை மாத்தி கூறி சொதப்பினேன் . பின்பு இரண்டு பேர் பாடினர் .
போட்டி முடிந்து விட்டது என்று கூறினார் . ஒரு மணி நேரத்திற்கு பிறகு பரிசுகள் தரப்படும் என்று கூறினார் .

                    நான் என்னுடைய பள்ளி மூலமாக இந்த போட்டிக்கு வந்திருந்தேன் . சென்று பள்ளி ஆசிரியரிடம் " மிஸ் , பரிசு யாருக்கென்று தெரியவில்லை . ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் தருவார்களாம் " என்றேன் . அவரும் சரி  வா  சாப்பிட்டுவிட்டு வரலாம் என்றார் . நான் " இல்லை மிஸ் , நீங்க போய் சாப்டுட்டு வாங்க . எனக்கு பசியில்லை ". அவர் சென்றுவிட்டார் . நான் பாடின அறைக்கு சென்றேன் . அங்கு யார் யார் நன்றாக பாடுவோர் என்று கேட்டுக்கொண்டு இருந்தனர் . நான் சென்று நான் பாடலாமா என்று கேட்டேன் . அவர்கள் சிறிது யோசித்த பிறகு ஒப்புக்கொண்டனர் . நான் சென்றி மேடை ஏறினேன் . முருகனை இப்பொழுதாவது என்னை காப்பார்ற்றும் படி வேண்டினேன் . சென்று அபிராமி அந்தாதியின் பாட்டினை பாடினேன் . கலையாத கல்வியும் என்று ஆரம்பித்து ஜோராக முடித்தேன் . எல்லோரும் மனமார பாராட்டி கை தட்டினர் . பிறகு பெருமிதத்துடன் சென்றேன் . சென்ற இடம் பல  ஆசிரியர்கள்  உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர் . என்னை பார்த்ததும் எழுந்து வந்து என்னை திரும்பவும் பாடச் சொன்னனர் . நான் பாடினேன் . பிறகு அதே மாதிரி அந்த பள்ளியில் உள்ள சில ஆசிரியர்கள் இரண்டு மூன்று முறை என்னை என்னை பாட வைத்தனர் . 

                   நான் மிகவும் களைப்படைந்து விட்டேன் . பத்து நிமிடங்களில் பரிசை குடுப்பர் . எப்படியும் எனக்கு கிடைக்காது என்று சென்று அங்கே உட்கார்ந்து சிறிது கண்ணை மூடினேன் . சில நொடிகளில் களைப்பினால் கண்ணயர்ந்தேன் . என் ஆசிரியர் வந்து என்னை எழுப்பினார் . " அமுதா .... எழுந்திரு " என்று கத்தினார் . நானும் அடித்துப் போட்டது போல் எழுந்தேன் . எல்லோரும் என்னை இன் முகத்துடன் நோக்கினர் . அப்பொழுதுதான்   மைக்குக்கு முன்னால் நின்று பரிசு கூற ஆரம்பித்து விட்டனர் என்று தெரிந்தது . திடிரென்று என்னுடைய பெயரை அவர்கள் கூப்பிட்டவடன் எனக்கு அப்படியே புல்லரித்தது . அப்படியே அதே புல்லரிப்புடன் சென்றேன் . இதில்  எனக்கு முதற் பரிசு வேறு . அப்படியே முருகனை நினைத்து " முருகா , என்னை காப்பாற்று என்றேன் , எனக்கு இவ்வளவு பெரிய அறிய பரிசை குதிருக்கிறாய் , இதற்க்கு நான் உனக்கு எப்படி நன்றி சொல்வேன் " . கண்ணீர் மல்க பரிசை வாங்கி கொண்டேன் .

Monday, May 9, 2011

இந்திய இடம் - இசை உலகில்

  

 இந்தியா உலகில் ( இசையில் ) முதல் இடத்தில் இருக்கிறது . மற்ற நாடுகள் அதாவது ( அமெரிக்க , இங்கிலாந்த் , இத்தாலி , பிரான்ஸ் போன்ற நாடுகள் ) இசையில் இந்தியாவை முந்த முடியாது .

இப்பொழுது இருக்கும் இந்தியா பழைய இந்தியா அல்ல . வெள்ளையர்களால் புதிதாக உருவாக்கி விட்டுசெல்லபட்ட அனாதை நாடு . இந்த மண் பல இசை மேதைகளும் அறிவிற் சிறந்த ஞானிகளும் தோன்றி மறைந்த மண் . இதில் வெள்ளையர்கள் கால் பட்ட உடனேயே அந்த சிறப்பு அம்சம் சிறிது சிறிதாக மறையதொடங்கியது .

அக்காலத்தில் த்யாகராஜர் , முத்துசுவாமி தீட்சிதர் , சதாசிவ ப்ரம்மேந்தர் போன்ற இசை மும்மூர்த்திகளும் பல இசை தெய்வங்களும் வளர்ந்து , வாழ்ந்து , இருந்து , மறைந்த மண் . அப்படிப்பட்டவர்கள் இயற்றிய பாடல்கள் இந்தியாவில் இன்னும் சில இடங்களில் மட்டுமே நீடித்து வருகின்றன . ஆனால் வெறும் 100 வருடங்களுக்கு முன்பு வந்து இந்தியாவை கைப்பற்றி அதனுடைய வளங்களையெல்லாம் கொள்ளையடித்துச் சென்றவனான அந்த ஆங்கிலேயன் கொண்டு வந்த அந்த பாட்டுகள் , இப்பொழுது jazz , beat , rock , பின் வேறு பல இசைகளும் இப்பொழுது மனிதனின் மனங்களை ஆட்கொண்டு விட்டன .

இப்பொழுது இந்தியா இசையில் சிறந்து விளங்கு வதற்கு காரணமே கர்நாடக இசை மட்டுமே . அதுவும் இப்பொழுது சிறிது சிறிதாக அழிந்து வருகிறது .

ஆனால் இன்னும் சில இடங்களில் இசை ( கர்நாடகம் ) சிறந்து விளங்குகிறது . இன்னும் முழுதாக அழியவில்லை . பல இசை மேதைகள் அதை சாதித்து வருகிறார்கள் .

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்

இது ஒரு மகா மேதை எழுதிய ஒரு திரு வாக்கு . அது மெய் . இன்னும் காலம் கெடவில்லை , இசையை மேலோங்கவும் இந்தியாவின் மானத்தை பாதுகாக்கவும் எல்லோரும் முன்வருவோம் . இளைஞர்கள் எதிர்காலத்தின் தூண்கள் . அவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் . எல்லோரும் கைக்கோர்த்து நம் மண்ணின் வளத்தை பாதுகாப்போம் .

ஜெய் ஹிந்த் !

Sunday, May 1, 2011

ராமதாசர் - அவருடைய ஒரு சிறிய அனுபவம்




இவர் சிவாஜியின் ( மராட்டிய அரசர் ) குரு . சிவாஜிக்கு ராம பக்தி உண்டாவதற்கு இவர் தான் காரணம் . சிவாஜி ராமதாசரை தம்முடைய தெய்வமாக கருதினார் .

ராமதாசரை பற்றியும் அவருடைய ஒரு சிறிய அனுபவம் பற்றியும் கீழ் காணுவோம் :

ராமதாசர் சூர்யாஜி மற்றும் இராணு - பாய் என்பவர்களுக்கு மகனாய் ராம நவமி அன்றைக்கு ஜல்னா ( மகாராஷ்டிரா ) என்னும் ஊரில் 1530 - இல் ஒரு பிராமன குடும்பத்தில் பிறந்தார் . அவருடைய பெயர் நாராயண் .
சிறுவயதிலேயே ராமரிடம் பக்தி கொண்ட காரணத்தினால் அவர் பெயரை ராமதாசர் என மாற்றிக்கொண்டார் . { ( ராம ) ( தாசர் - பக்தர் அல்லது அடியேன் ) ( ராமரின் பக்தர் அல்லது அடியார் ) }

ராமதாசர் , ஒரு முறை வழக்கம் போல பல வீடுகளில் பிக்ஷை வாங்கிக்கொண்டு ஒரு வீட்டிற்கு சென்றார் . அங்கே ஒரு ஒரு பெண் வாசலில் சாணி தெளித்துகொண்டிருந்தார் . இவரை பார்த்தவுடன் அந்தப் பெண் சாணி துடைத்துகொண்டிருந்த துணியை இவர் மேல் வீசினார் . இதனால் ராமதாசர் கோபப்படாமல் அந்தத் துணியை எடுத்துக் கொண்டு வந்து தனது ஆசிரமத்தில் அதை அழுக்கு போகக் கழுவினார் . பிறகு அந்தத் துணியில் இருந்த நூல்களை பிரித்து திரியாக்கி அதை இறைவனுக்கு முன் தீபமாக ஏற்றி இறைவனிடம் " அந்த பெண்ணுக்கு என்ன குறையோ தெரியவில்லை , நீ கருணை கூர்ந்து அதை நீக்கிவிடு " என்றார் .


இவ்வாறு தன்னை அவமதித்து அனுப்பிய பெண்ணுக்கு நல்வழிக்காட்ட இறைவனுக்கு பிரார்த்தித்த ராமதாசர் இன்னும் பலர் மனங்களில் அணையா தீபமாக இருக்கிறார் .